தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ராணுவ தளவாட கண்காட்சி: கிழக்கு கடற்கரைச் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சிக்காக, கிழக்கு கடற்கரைச் சாலையில் புதன்கிழமை (ஏப்ரல் 11) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:40 pm

திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சிக்காக, கிழக்கு கடற்கரைச் சாலையில் புதன்கிழமை (ஏப்ரல் 11) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து டிஜிபி அலுவலகம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ராணுவ தளவாட கண்காட்சிக்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 
அதன்படி சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு நேரடியாக செல்லும் வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை சோதனைச் சாவடியிலிருந்து ராஜீவ் காந்தி சாலை வழியாகவும், கோவளம் சந்திப்பில் இருந்து கேளம்பாக்கம் இணைப்புச் சாலை வழியாக ராஜீவ்காந்தி சாலையை அடைந்து திருப்போரூர், பூஞ்சேரி வழியாகச் செல்லலாம். 
அதேபோன்று புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்தில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்னை வரும் வாகனங்கள் வெங்கம்பாக்கத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாகவும், பூஞ்சேரி சந்திப்பு வழியாகவும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை சென்னைக்குச் செல்லலாம். 
ஏப்.12-ஆம் தேதி மட்டும் காலை 7 முதல் மாலை 4 மணி வரை சென்னை - மாமல்லபுரம், மாமல்லபுரம் - சென்னை செல்லும் நகரப் பேருந்துகள் கோவளம் சந்திப்பு கேளம்பாக்கம் பூஞ்சேரி வழியாக இயக்கப்படும். 
மேலும் இக்கண்காட்சிக்கு வர்த்தகம் தொடர்பாக சென்னையிலிருந்து வரும் வாகனங்கள் கோவளம் சந்திப்பு வழியாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள திருவிடந்தை வாகன நிறுத்தத்தை சென்றடையலாம். அதேபோல் மாமல்லபுரம் பகுதியிலிருந்து வரும் வர்த்தகம் தொடர்பான வாகனங்கள் பேரூர் சந்திப்பைத் தாண்டி கண்காட்சியின் பின்புறமுள்ள வாகன நிறுத்தங்களை வந்தடையலாம். 
இந்த போக்குவரத்து மாற்றம் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
ஏப்.14 -ஆம் தேதியன்று கண்காட்சியைக் காண வரும் பொது மக்கள் கோவளம், பேரூர் சந்திப்பு வழியாக கண்காட்சித் திடலை அடைந்து இருசக்கர வாகனம், கார்களுக்கென ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தை வந்தடையலாம். அரசுப் பேருந்துகளில் வருவோர் கண்காட்சிக்கு அருகில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தை வந்தடையலாம். 
கண்காட்சித் திடலை ஒட்டிய திருவிடந்தை, கோவளம், வடநெம்மேலி, தெற்குப்பட்டு கிராம மக்களின் வாகனங்களும், பேருந்துகளும் சென்று வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.