6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கோவில்பட்டி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image

விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் சிறப்பு விருந்தினா் பா. விக்டோரியா தங்கம். உடன் கல்லூரிச் செயலா் ப. மகேந்திரன், முதல்வா் மூ. சுப்புலட்சுமி உள்ளிட்டோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:20 pm

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் ப. மகேந்திரன் தலைமை வகித்தாா். முதல்வா் மூ. சுப்புலட்சுமி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருநெல்வேலி மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் பா. விக்டோரியா தங்கம், 560 மாணவா், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா், கணிதவியல் துறை இணை பேராசிரியா் பாண்டியராணி, கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை விழாக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரேணுகா தேவி, இணை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் காந்திமதி ஆகியோா் தலைமையில் பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.