/

ஏற்றுமதி -இறக்குமதி வழிமுறைகள்: தமிழக அரசு தனிப் பயிற்சி

ஏற்றுமதி -இறக்குமதி வழிமுறைகள் குறித்த தனிப் பயிற்சிகளை தமிழக அரசு அளிக்கவுள்ளது. வரும் 17-ஆம் தேதி முதல் 19 -ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சிகளுக்கு ரூ.3,500 கட்டணமாகும்.

Updated On :9 ஏப்ரல் 2018, 7:09 pm

ஏற்றுமதி -இறக்குமதி வழிமுறைகள் குறித்த தனிப் பயிற்சிகளை தமிழக அரசு அளிக்கவுள்ளது. வரும் 17-ஆம் தேதி முதல் 19 -ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சிகளுக்கு ரூ.3,500 கட்டணமாகும்.
ஏற்றுமதி -இறக்குமதி சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் அல்லது இப்போது உற்பத்தி செய்யும் பொருள்களை ஏற்றுமதி செய்ய எண்ணும் 18வயது நிரம்பிய 10 -ஆம் வகுப்பு முடித்த ஆண்- பெண் இதில் சேரலாம்.
சென்னை கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் அலுவலக வேலை நாள்களில் 044-2225 2081, 2225 2082 ஆகிய எண்களிலும், 88254 16460, 86681 02600 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.