விஷால் மட்டும் தமிழரா?: இயக்குநர் பாரதிராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி! 

விஷால் மட்டும் தமிழரா என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பிய இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். 
விஷால் மட்டும் தமிழரா?: இயக்குநர் பாரதிராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி! 
Published on
Updated on
1 min read

சென்னை: விஷால் மட்டும் தமிழரா என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பிய இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமிளா குருமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று சர்ச்சை எழுந்தது. அத்துடன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சென்னையில் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா கேள்வி எழுப்பினார். அத்துடன்  இது தொடர்பாக தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை என்னும் அமைப்பைத் துவக்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து இதுதொடர்பாக மனு அளித்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பொழுது, தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு துணைவேந்தராக தமிழரை நியமிக்காத விஷயம் பற்றி  கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் விஷால் மட்டும் தமிழரா என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பிய இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் திங்களன்று சந்தித்தார் அப்பொழுது பிரமிளா குருமூர்த்தி மற்றும் சூரப்பா நியமனம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமிளா குருமூர்த்தி நியமனம் தொடர்பாக சர்ச்சைகளை கிளப்புகிறார்கள். ஆனால் அவரது தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர். தாயார் மட்டுமே கேரளவைச் சேர்ந்தவர். அத்துடன் தேர்வுக் குழுவினர் முறையான நடைமுறைகளை பின்பற்றியே தேர்வு செய்துள்ளனர்.

அதேபோல அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டது தொடர்பாகவும் புழுதி வாரித் தூற்றக் கூடாது. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு துணைவேந்தராக தமிழரை நியமிக்கவில்லையா என்று சகோதரர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் கேட்கிறேன்..தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உள்ளவர் என்ன தமிழரா? பாரதிராஜா முதலில் தான் சார்ந்த துறையில் உள்ள விஷயங்களைச் சரி செய்ய வேண்டும்.பிறகு எல்லாவற்றையும் பேசலாம்.       

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com