ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கருணைக் கொலை: சேலம் கோயில் யானையின் உடல்நிலை பரிசோதனை

சேலம் சுகவனேசுவரர் கோயில் யானை ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர்

News image

சேலம் சுகவனேசுவரர் கோயில் யானை ராஜேஸ்வரியை புதன்கிழமை பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:03 am IST

சேலம் சுகவனேசுவரர் கோயில் யானை ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் யானையின் உடல்நிலை குறித்து பரிசோதித்தனர்.
சேலம் சுகவனேசுவரர் கோயில் யானை ராஜேஸ்வரி (42) காலில் ஏற்பட்ட குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. முன்பக்க இடது காலில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக வலது காலை பயன்படுத்தி மட்டும் யானை நின்று வந்ததால், கால் வீக்க நோயால் அவதிப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 5 -ஆம் தேதி முதல் யானை நிற்க முடியாமல் தரையில் படுத்துக் கொண்டது. படுக்கையில் உள்ள யானைக்கு கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
இதனிடையே, விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர், வலியால் துடிக்கும் யானையை கருணைக் கொலை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கருணைக் கொலை செய்ய அனுமதி அளித்தது. மேலும், வலியால் துடிக்கும் யானை ராஜேஸ்வரியை 48 மணி நேரத்துக்குள் மருத்துக் குழு பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து சட்ட விதிகளைப் பின்பற்றி கருணைக் கொலை செய்யலாம் எனத் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சையியல் துறை பேராசிரியர் மருத்துவர் ஜெய தங்கராஜ்,, நாமக்கல் கால்நடை அறிவியல் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் விஜயகுமார், குமரேசன் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் புதன்கிழமை காலை யானை ராஜேஸ்வரியின் உடல் நலம் குறித்து நேரில் பரிசோதித்தனர். இதேபோல், கோவை மாவட்ட வனத் துறை மருத்துவர் மனோகரன், யானை ராஜேஸ்வரியின் உடல்நலத்தைப் பரிசோதித்தார்.
இதுதொடர்பாக சேலம் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் எஸ்.லோகநாதன் கூறும்போது, 'நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் குழுவினர் யானை ராஜேஸ்வரியின் உடல்நிலையை முழுமையாகப் பரிசோதித்துள்ளனர். அவர்கள் அளிக்கும் மருத்துவ அறிக்கையை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் வழங்குவோம். அதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதனிடையே, யானை ராஜேஸ்வரியை ஏராளமான பக்தர்கள் நேரில் வந்து பார்த்து வழிபட்டுச் செல்கின்றனர்.
மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர்கள் சிலர் யானையைப் பார்வையிட்டு, அதன் உடல்நிலையை ஆய்வு செய்தனர்.
'யானை படுத்த படுக்கையாக இருந்ததால்தான், அதற்கு உடலில் படுக்கை புண் ஏற்பட்டுள்ளது. மற்றபடி, அந்த யானை நிற்க முடியாமல் இருப்பதற்கு அதன் முன் கால்களில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுதான் காரணமாகும். மேலும், யானையை கருணைக் கொலை செய்யவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என சித்த மருத்துவர் தங்கதுரை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.