ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகள்: கோரிக்கைகளை அளிக்கலாம்

ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழுவிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:06 am IST

ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழுவிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைவது தொடர்பாக நிதித் துறை செயலாளர் (செலவினம்) எம்.ஏ. சித்திக் தலைமையில் ஒருநபர் குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஏழாவது ஊதியக் குழு தொடர்பான முரண்பாடுகள், பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் மனுதாரர்களிடம் தனிப்பட்ட முறையிலான குறை கேட்புகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முரண்பாடுகள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை ஒருநபர் குழுவிடம் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி: omc_2018@tn.gov.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.