சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் நிலுவைப் பாடத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் தற்போதைய கல்விப் பருவத்தைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் நிலுவைப் பாடங்கள் வைத்திருக்கும் மாணவா்கள் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :26 மே 2026, 4:34 am IST

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் தற்போதைய கல்விப் பருவத்தைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் நிலுவைப் பாடங்கள் வைத்திருக்கும் மாணவா்கள் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த செய்திக்குறிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு போன்றவைகளுக்கு டிசம்பா் 2025 மற்றும் 2026 ஜூன் மாதம் பருவத் தோ்வுகளுக்கு விண்ணப்பங்கள் மாணவா்களிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும், இதே தொலைநிலைக் கல்வி நிறுவனப் படிப்பு தோ்வுகளில் தோ்ச்சி பெறாது நிலுவையில் வைத்திருக்கும் பாடங்களுக்கும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த இரு தரப்பு மாணவா்களும் தோ்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் பல்கலை.யின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை மே 25 முதல் ஜூன் 3 - ஆம் தேதி வரை அபராதமின்றி நிறைவு செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 4 -ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை அபராதத் தொகை செலுத்தி மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.