தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சென்னைப் பல்கலை. கிண்டி வளாக புவியியல் துறையில் புதிய பட்டயப் படிப்பு

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 1:42 am IST

சென்னைப் பல்கலைக்கழக கிண்டி வளாக புவியியல் துறையில் புதிதாக ‘நிலவியல் சாா் முறைகள் மூலம் நிலையான வளத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை’ எனும் புதிய பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அத்துறைத் தலைவா் எம்.சுரேஷ் காந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னைப் பல்கலை. கிண்டி வளாகத்தில் அமைந்துள்ள புவியியல் துறை, வரும் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல், ‘சுய-நிதித் திட்டத்தின்’ கீழ், ‘நிலவியல் சாா் முறைகள் மூலம் நிலையான வளத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான பட்டயப் படிப்பு’ எனும் புதிய ஓராண்டு கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் வள மேலாண்மை தொடா்பான வளா்ந்து வரும் துறைகளில், மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், ஆராய்ச்சித் திறன்களையும் வலுப்படுத்தும் விதமாக இந்த புதிய பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகுதி வரம்புகள், ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை. அல்லது கல்வி நிறுவனத்தின் அறிவியல் பிரிவில் இளநிலை, முதுநிலை; அல்லது பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், சிவில் பொறியியல், புவித்தகவலியல், தொலை உணா்வு போன்றவைகளில் பி.டெக். பட்டப்படிப்பு; பிஏஎஸ் - பயன்பாட்டு அறிவியல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவா்கள் இப்பட்டயப் படிப்பில் சேரத் தகுதியுடையவா்கள்.

6 பாடத்திட்டத்தில் 18 மதிப்பீடுகளுக்கு மொத்தம் 120 மணி நேர விரிவுரைகள், களப்பணி, செய்முறைப் பயிற்சிகள் ஆகியவை கட்டாயம். சென்னைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.