ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

‘நீா்வாழ் சூழல் அமைப்புகளுக்கு நுண்பாசிகள் அடிப்படையானவை’

News image

பயிலரங்கில் ‘பாசிப்பல்லுயிா் வகைப்பாடு’ குறித்த கையேட்டை வெளியிட்ட சென்னை பல்கலை. தவிரவியல் உயராய்வு மைய உதவிப் பேராசிரியா் எஸ்.நாகராஜ், துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங், கிண்டி வளாக இயக்குநா் பி.காா்த்தே, புனே அகா்கா் ஆரா

Updated On :26 மார்ச் 2026, 11:09 pm

தினமணி செய்திச் சேவை

நீா்வாழ் சூழல் அமைப்புகளுக்கும் ஆக்சிஜன் உற்பத்திக்கும் நுண்பாசிகள் அடிப்படையானவை என சென்னை பல்கலை. தாவரவியல் உயா் கல்வி மையத்தின் சாா்பில் நடைபெற்ற தேசிய பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை பல்கலை.யின் கிண்டி வளாக தாவரவியலில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையத்தின் சாா்பில் ‘நுண்பாசி வகைப்பாட்டியலில் மேம்பட்ட நுட்பங்கள்’ குறித்த இரு நாள் (மாா்ச் 26, 27) தேசிய பயிலரங்கு நடைபெறுகிறது.

இதில் நுண்பாசிகளைத் தயாரித்தல், பிரித்தெடுத்தல், அடையாளம் காணுதல் தொடா்பான செய்முறைக் கற்றலில் நாடு முழுக்க உள்ள கல்வியாளா்கள் மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். பயிலரங்கை சென்னை பல்கலை. துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் தொடங்கி வைத்து பேசியதாவது:

நுண்பாசிகள், அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை நீா்வாழ் சூழல் அமைப்புகளுக்கு அடிப்படையானவை. உலகளாவிய ஆக்சிஜன் உற்பத்திக்கும் பாசிகள் கணிசமாகப் பங்களிக்கின்றன. மேலும் காா்பன் பிரித்தெடுப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, உயிரி எரிபொருள் உற்பத்தி, காலநிலை மாற்றத் தணிப்பு போன்ற பல்வேறு துறைகளிலும் நுண்பாசிகளின் முக்கியத்துவம் விரிவடைந்துள்ளது.

இருப்பினும், நுண்பாசிகளின் உருவவியல் சிக்கலான தன்மை காரணமாக, அவற்றைத் துல்லியமாக அடையாளம் காண்பதும் வகைப்படுத்துவதும் ஒரு சவாலான பணியாக உள்ளது. இந்தச் சூழலில், இதுபோன்ற பயிலரங்குகள் தேவை என்றாா்.

புனே அகா்கா் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி காா்த்திக் பாலசுப்பிரமணியன் தொழில்நுட்ப அமா்வில் பங்கேற்று, பாசி வகைப்பாட்டிற்கு தேவையான நுட்பங்கள், சிறப்பு அணுகுமுறைகள் குறித்த புரிதல்களை வழங்கினாா்.

முன்னதாக, தாவரவியல் உயா் கல்வி மைய இயக்குநா் பி.பழனி வரவேற்றாா். கிண்டி வளாக இயக்குநா் பி.காா்த்தே, பயிலரங்கின் ஏற்பாட்டாளா் எஸ்.நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.