மேலும் இந்த பிரச்சனையில் மத்திய அரசின் ஆதரவில் இருக்கின்ற தமிழக ஆளுநர் சந்தேக வளையத்திற்குள் இருப்பதால், சிபிஐ கூட இதை நேர்மையாக விசாரிக்குமா என்கிற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது. ஆகவே நிர்மலாதேவி இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாரா, அவரின் பின்னணியில் உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள் போன்ற சக்திவாய்ந்த, அதிகாரமிக்க நபர்கள் யார், யார் என்பதை கண்டறிய, நீதிமன்றமே தானாக முன்வந்து தனது நேரடி கண்காணிப்பில் மிக நேர்மையான அதிகாரிகளை கொண்ட விசாரணை குழுவை அமைத்து, உண்மைகளை கண்டறிந்து இந்நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்தால்தான், பெற்றோர்கள் அச்சமின்றி தனது பெண்பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிகளுக்கு தைரியமாக அனுப்பக்கூடிய சூழ்நிலை உருவாகும்.