அதிமுகவில் உறுப்பினர் சேர்ப்புக்கான படிவங்களைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்டனர்.
அந்த அறிவிப்பின் விவரம்:-
அதிமுக உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்கும் பணிகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன.
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கட்சி உறுப்பினர் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தலுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் பதிவைப் புதுப்பித்தலுக்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தங்
களது அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.