உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சோ.அய்யர்: 2-வது முறையாகப் பதவியேற்றார்

உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சோ.அய்யர் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவராக சோ.அய்யருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவராக சோ.அய்யருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 
Updated on
1 min read

உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சோ.அய்யர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்பு உறுதிமொழியை செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பதவியேற்ற பின் சோ.அய்யர், ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு மலர்க்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார். பதவியேற்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் சோ.அய்யர் அளித்த பேட்டி:
உள்ளாட்சி அமைப்புகளில் புகார்கள் குறித்து விசாரிக்க தனியான அமைப்பு வேண்டுமென மத்திய 13-வது நிதிக் குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து, தனி சட்டத்தின் மூலமாக, இத்தகைய அமைப்பு தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. 
கடந்த 3 ஆண்டுகளாக அது செயல்பட்டு வருகிறது. ஒரு சிவில் நீதிமன்றமாகவே இந்த அமைப்பு செயல்பட வேண்டியுள்ளது.
இந்த அமைப்பானது, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும், அவர்கள் பணிக்காலத்தில் செய்த குறைபாடுகள், பணிகளில் தொய்வு, சிலருக்கு நன்மை செய்தல், சிலருக்கு தீமை செய்தல் போன்றவற்றை புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். மேலும், பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலும் தாமாகவே முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டு சரிசெய்து வருகிறோம்.
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. ஆனாலும், அவர்கள் பணியில் இருந்த காலத்தில் செய்த தவறுகளும் இப்போது விசாரணைக்கு வரும். அதிகாரிகள், பணியாளர்கள் இன்னும் பணிபுரிந்து வருகிறார்கள். எனவே, அவர்கள் செய்த தவறுகள், செய்யத் தவறியவைகள் ஆகியன குறித்து விசாரித்து வருகிறோம். இந்த அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு முன்பாக, உள்ளாட்சி அமைப்புகள் செய்யும் பணிகளும், அதுதொடர்பான புகார்களும் அவர்களுக்குள்ளே முடிந்து விடும். இப்போது தனியான அமைப்பு வந்துள்ளது. இந்த அமைப்பால் அவர்களுக்கு பயம் வந்துள்ளது.
ஏழைக்கு ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் அதைக் கேட்பதற்கு ஓர் அமைப்பு உள்ளது என்ற நிலை வந்துள்ளது. புகார் கொடுத்தவர்களும் இதனை கண்கூடாகக் காண்கிறார்கள். இந்த மூன்று ஆண்டு காலங்களில் குறிப்பிடத்தக்க சம்பவமாக உள்ளாட்சி அமைப்புக்கு இழப்பு ஏற்படுத்தியதால், ரூ.49 லட்சத்தை அரசுக்குக் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். இதுபோன்ற பல நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com