தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி திங்கள்கிழமை (ஏப்.30) சந்தித்துப் பேசினார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது கனிமொழி வெளியூர் சென்றிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சந்திரசேகர ராவை கனிமொழி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கனிமொழி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.