தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புத்த பூர்ணிமா: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

புத்த பூர்ணிமாவையொட்டி, அஞ்சல் துறை சார்பில் புத்தரின் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் உறை சென்னையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

News image
புத்த பூர்ணிமாவையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தரின் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் உறையை வெளியிடும் (இடமிருந்து) அஞ்சல் துறை வர்த்தகப் பிரிவின் தலைவர் 
Updated On :30 ஏப்ரல் 2018, 8:00 pm

DIN

புத்த பூர்ணிமாவையொட்டி, அஞ்சல் துறை சார்பில் புத்தரின் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் உறை சென்னையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும், அவர்களின் கருத்துகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அவர்களின் உருவம் பொறித்த தபால் தலை, உறைகளை அஞ்சல் துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புத்தரின் பிறந்த நாளான புத்த பூர்ணிமாவையொட்டி, அஞ்சல் துறை சார்பில் அவரின் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு அஞ்சல் துறை இயக்குநர் ஏ.சரவணன் தலைமை வகித்தார். அஞ்சல் துறையின் தபால், வர்த்தகப் பிரிவின் தலைவர் ஜே.டி.வெங்கடேஸ்வரலு கலந்து கொண்டு புத்தரின் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். அதை சென்னை கென்னத் லேனில் உள்ள ஸ்ரீலங்கா மஹாபோதி சங்கத்தின் தலைமை புத்த பிக்கு கலவானே மஹானாமா பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அஞ்சல் துறை தபால், வர்த்தகப் பிரிவு தலைவர் ஜே.டி.வெங்கடேஸ்வரலு பேசியது:
முதல்கட்டமாக, சென்னை அண்ணா சாலை அஞ்சலகத்தில் உள்ள தபால் தலை சேகரிப்பு பிரிவில் இந்த சிறப்பு உறை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த வாரம் முதல் திருச்சி, மதுரை, கோவை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் இந்த சிறப்பு உறைகள் விற்பனை செய்யப்படும். தபால் தலை ஒட்டி முத்திரையிட்ட சிறப்பு உறை ரூ. 15-க்கும், சாதாரண உறை ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்படும் என்றார் வெங்கடேஸ்வரலு. இந்நிகழ்ச்சியில், தபால் தலை சேகரிப்போர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.