தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மக்கள் குறைதீர் முகாமில் முதியவர் ஏற்படுத்திய பரபரப்பு!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமின்போது, ஆட்சியர் தலை மீது காலணியை வைக்க முயன்ற முதியவரை பிடித்து போலீஸார் விசாரித்து

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 8:57 pm

DIN

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமின்போது, ஆட்சியர் தலை மீது காலணியை வைக்க முயன்ற முதியவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த முகாமின்போது மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டிருந்தார். அப்போது வரிசையில் வந்த 60 மதிக்கத்தக்க முதியவர் திடீரென்று தனது காலில் அணிந்திருந்த காலணியை தூக்கிக் கொண்டு, ஆட்சியரின் தலை மீது வைக்க சென்றார். 
உடனே ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் சற்று தள்ளி சென்றார். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமாரின் தலை மீது காலணியை வைக்க முயன்ற முதியவர் தள்ளிவிடப்பட்டார்.
உடனே அங்கிருந்த அரசு அலுவலர்கள் சிலர் முதியவரை தாக்கினராம். இதையடுத்து, போலீஸார் முதியவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். 
அப்போது அவர் ராசிபுரம் கச்சநாச்சம்பட்டியைச் சேர்ந்த கே.ஆறுமுகம் (57) என்பது தெரியவந்தது. தான் செருப்படி சித்தர் என்பதால் ஆசிர்வாதம் செய்வதற்காகவே ஆட்சியரின் தலை மீது காலணியை வைக்க முயன்றதாகவும் ஆறுமுகம் போலீஸாரிடம் தெரிவித்தார். 
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமின்போதும், காலணியை எடுத்து ஆசிர்வாதம் செய்ய முயன்றதாகப் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.