ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

தூத்துக்குடியில் ஊருணியில் விழுந்து உயிரிழந்த மூன்று மாணவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:53 pm

DIN

தூத்துக்குடியில் ஊருணியில் விழுந்து உயிரிழந்த மூன்று மாணவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி கிராமத்தில் சாலையின் ஓரத்தில் உள்ளது குப்பையாபிள்ளை ஊருணி. அதில் குளிக்கச் சென்ற கணேஷ்குமார், கவின்குமார், கௌதம் ஆகிய மூன்று பேரும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.