தற்போது திரிசூலம் வரை செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கும் வண்டலூர் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியிடம் திட்ட முன்வரைவுடன் கோரிக்கை மனு அளித்துள்ளதாக ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
குரோம்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பல்வேறு நகர்நலச் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற அவர் பேசியதாவது:
தொல்லியல் துறை உத்திரவால் பாதிக்கப்பட்ட செம்பாக்கம், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தடையில்லாச் சான்று பெற்று தங்கள் வீடுகளை மராமத்துப் பணி மேற்கொள்ள வகை செய்யும் உத்தரவை ஏற்கெனவே பெற்றுத் தந்துள்ளேன். தொல்லியல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சி நாடெங்கும் தொல்லியல் துறை பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். பல்லாவரம் நகராட்சி 13-ஆவது வார்டில் ரூ.1 கோடி செலவில் விளையாட்டு மைதானம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குரோம்பேட்டை ரயில்நிலையத்தில் கழிப்பறை வசதி, பயணச்சீட்டு முன்பதிவு வசதி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்களிடம் இருந்து வரும் கடிதங்களுக்கு பல்லாவரம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் விரைவில் உரிய பதில் கடிதம் அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் இதர நகராட்சிகளை ஒப்பிடும்போது பல்லாவரம் நகராட்சி பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கிறது. அதைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நகர்நலச் சங்கப் பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் நேரில் சந்தித்து விளக்க உள்ளேன்.
தற்போது திரிசூலம் வரை செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கும் வண்டலூர் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியிடம் திட்ட முன்வரைவுடன் கோரிக்கை மனு அளித்துள்ளேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார் கே.என்.ராமச்சந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சி.வி. சண்முகத்தைக் கண்டித்து விடியோ வெளியிட்ட நடிகர் விஷால்!

தங்கம் வாங்க நல்ல நாள்: தங்கம் அதிரடி குறைவு!

அதிவேகமாக 900 கோல்கள்..! மெஸ்ஸி உலக சாதனை!

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

