சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக உறுப்பினர் சேர்ப்பு: படிவங்களை அளிக்க காலக்கெடு நீட்டிப்பு

அதிமுகவில் உறுப்பினர் சேர்ப்புக்கான படிவங்களைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:07 pm

DIN

அதிமுகவில் உறுப்பினர் சேர்ப்புக்கான படிவங்களைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்டனர்.

அந்த அறிவிப்பின் விவரம்:-
அதிமுக உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்கும் பணிகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன. 
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கட்சி உறுப்பினர் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தலுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் பதிவைப் புதுப்பித்தலுக்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தங்
களது அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.