நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

திருச்சி, திருத்தணியில் 102 டிகிரி வெயில்

தமிழகத்தில் 6 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரியைக் கடந்தது. அதிகபட்சமாக, திருச்சி, திருத்தணியில் தலா 102 டிகிரி வெப்பநிலை பதிவானது.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 4:22 am IST


தமிழகத்தில் 6 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரியைக் கடந்தது. அதிகபட்சமாக, திருச்சி, திருத்தணியில் தலா 102 டிகிரி வெப்பநிலை பதிவானது.
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மாலை மற்றும் இரவில் இடி, மின்னல் ஏற்படக் கூடும். 
வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்: பல்வேறு இடங்களில் மேகக்கூட்டங்கள் இன்றி வானம் தெளிவாக காணப்படுகிறது. இதனால் முற்பகலில் வெப்பநிலை அதிகமாகவும், மாலையில் வெப்பம் குறைவாகவும் காணப்படுகிறது. இதேநிலை தொடர வாய்ப்பு உள்ளது.
தென்மேற்குப் பருவமழையின் 3-ஆவது கட்டம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, தென்தமிழகத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட ஒரு டிகிரி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 6 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரியைக் கடந்தது. அதிகபட்சமாக, திருச்சி, திருத்தணியில் தலா 102 டிகிரி வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரி, வேலூர், பாளையங்கோட்டை, கடலூரில் தலா 100 டிகிரி வெப்பநிலையும் பதிவானது. 
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு திசையில் இருந்தும் தென் தமிழகக் கடலோரத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்தும் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.