திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேட்டுப் புகார்கள்: விசாரணைக்கு ஓய்வு பெற்ற 4 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் 

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற 4 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Published On :

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற 4 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் கடந்த மே மாதம் பல கட்டங்களாக நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. எனவே, தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் கூட்டுறவு சங்க தேர்தலுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தவும், தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்தும், தேர்தல் தொடர்பான வழக்குகளை ஜூன் மாதத்துக்குள் விசாரித்து முடிக்கவும் உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க சென்னை, கோவை, மதுரை, திருச்சியை மையமாகக் கொண்டு 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தக் குழுவில் மாவட்ட ஆட்சியர்கள், இணைப் பதிவாளர்கள் அடங்கிய குழுக்களை ஒரு வார காலத்துக்குள் தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்தக் குழுக்கள் 3 மாதத்துக்குள் விசாரணை நடத்தி, கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற 4 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தமிழகம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மேற்கு மண்டலத்திற்கு நீதிபதி ராஜேஸ்வரனும், தெற்கு மண்டலத்திற்கு நீதிபதி ராமநாதனும், வடக்கு மண்டலத்திற்கு நீதிபதி வெங்கட்ராமனும் மற்றும் கிழக்கு மண்டலத்திற்கு என நீதிபதி ராஜசூர்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளையும் வெளியிடலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.