
டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் என்று அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி கேட்கவில்லை. நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார். இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது...?.
மன்னார்குடி கூட்டத்திற்கு டோக்கன் கொடுத்து குக்கர் தருவதாக கூட்டத்தை கூட்டியுள்ளார். எப்படி கொடுப்பார்...?. சிலைக் கடத்தல் வழக்கு உட்பட அரசின் ஒவ்வொரு செயலும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அரசுக்கு விருப்பமில்லை, அதனாலேயே தள்ளிப்போடுகிறது.
பொன். மாணிக்கவேல் ஒரு நேர்மையான அதிகாரி. வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் முறைகேடு நடக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







