தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

புதிய துணை மின் நிலையங்கள் - அலுவலகக் கட்டடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின்சாரத் துறைக்கான அலுவலகக் கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

News image

ஒன்பது மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 10 துணை மின் நிலையங்கள், மின் பகிர்மான வட்டத்திற்கான மேற்பார்வை பொறியாளர் அலுவலகக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர் 

Updated On :30 ஜனவரி 2024, 9:56 pm IST


புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின்சாரத் துறைக்கான அலுவலகக் கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக புதிய கட்டடங்களை அவர் திறந்தார். 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டம், பூனாச்சியில் 110 கிலோவோல்ட் துணை மின் நிலையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு, திருமுக்கூடல், தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, அரியலூர் மாவட்டம் அய்யூர், நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளம், திருவண்ணாமலை மாவட்டம் வரகூர், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 10 துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரியில் கட்டப்பட்டுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகக் கட்டடத்தையும் அவர் திறந்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அரசு கலை -அறிவியல் 
கல்லூரிகளுக்கான கட்டடங்கள்: இதேபோன்று, தேனி மாவட்டம் தப்புகுந்து கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிக்கான நிர்வாகம், கல்வியியல் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை புதுப்பட்டி கிராமத்தில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் கூடுதல் கட்டடங்களையும், அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் கிராமத்தில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் கூடுதல் கட்டடங்கள், நீலகிரி மாவட்டம் உதகையில் மகளிர் விடுதிக் கட்டடம், திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வகுப்பறைக் கட்டடங்கள் ஆகியவற்றையும் அவர் திறந்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.