தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மழைக்கால வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி துவக்கம்: செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் திங்கள்கிழமை துவங்கிய மழைக் கால வன விலங்குகள் கணக்கெடுப்பில், வனப் பணியாளர்கள் எம்.ஸ்டிரப்' என்ற

போலாரி கோவில் சாலையில் பதிவான புலியின் கால் தடத்தை ஆய்வு செய்யும் வனச் சரக அலுவலர் பெர்னாடு, வனவர் சிவகுமார் உள்ளிட்டோர்.

Updated On :


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் திங்கள்கிழமை துவங்கிய மழைக் கால வன விலங்குகள் கணக்கெடுப்பில், வனப் பணியாளர்கள் எம்.ஸ்டிரப்' என்ற மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி புகைப்படங்கள், விடியோ உள்ளிட்ட தகவல்களை அனுப்பினர். இந்த ஆண்டு கணக்கெடுப்புப் பணியில் காகிதமில்லா தகவல் பரிமாற்றம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7 வனச் சரகங்கள் உள்ளன. மழைப்பொழிவுக்கு முன்னர், பின்னர் என ஆண்டுக்கு இருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி, மழைக் கால வன விலங்குகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தொடர்ந்து 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டு காகிதமில்லா தகவல் பரிமாற்ற முறையைப் பின்பற்றி செல்லிடப்பேசியில் பதிவேற்றம் செய்து அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய புலிகள் காப்பகத்தால் இதற்கென புதிதாக எம்.ஸ்டிரப்' என்ற மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்லிடப்பேசி வன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
இந்த செல்லிடப்பேசி, கணக்கெடுப்பு, ரோந்துப் பணிக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சொந்தப் பயன்பாட்டுக்கு இதைப் பயன்படுத்த இயலாது. 
வனப் பணியாளர்கள் இதுவரை கணக்கெடுப்பின்போது அதற்குரிய படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துவந்தனர். இந்த ஆண்டு கணக்கெடுப்புக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருள் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசியில், வனத்தில் பார்க்கும் விலங்குகளின் படங்கள், விடியோ, தடயங்கள், விவரங்களைப் பதிவேற்றம் செய்து சென்னை மையத்துக்கு (சர்வர்) அனுப்பி வைக்கின்றனர். 
தகவல் சேகரிக்கப்படும் இடம், நேரம் ஆகியவற்றுடன் புகைப்படம், விடியோ ஆகியவை சம்பந்தப்பட்ட வனக் கோட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டன. அவர்கள் அங்குள்ள கணினி மூலம் கணக்கெடுப்பு விவரங்களைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு உத்தரவுகளைப் பிறப்பித்தனர். 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, தூக்கநாயக்கன்பாளையம், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய 7 வனச் சரகங்களில் 46 குழுக்களில் 320 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் வனவர் தலைமையில் 5 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இதுதவிர, புலி, சிறுத்தை, கரடி, கழுதைப்புலி போன்ற விலங்குகள் நடமாடும் பகுதிகளில் ஆங்காங்கே தானியங்கி கேமராவை வைத்து, அவற்றின் வாழ்வியல் முறையைப் படம் பிடித்தும் தகவல் சேகரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.