பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் புறப்பட்டனர்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 10:39 pm IST

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் புறப்பட்டனர்.

திமுக தலைவர் கருணாநிதி, உடல்நல குறைபாடு காரணமாக கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை 5 அறிக்கைகள் வெளியிட்டன. அதில், கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருவதாக தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை காவேரி மருத்துவமனை சார்பில் 6-ஆவது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  அவரது வயது மூப்பு தொடர்புடைய பிரச்னைகளின் காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை இயல்பாக வைத்திருப்பது சவாலாக உள்ளது.

அவர் தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.  அடுத்த 24 மணிநேரத்தில் அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் எதிர்வினையாற்றுவதைப் பொறுத்தே எதையும் முன் கணிக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அறிக்கை திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், ஏராளமாக திமுக தொண்டர்கள்  காவேரி மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

காவேரி மருத்துவமனை வெளியிட்ட இந்த அறிக்கையை அடுத்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். தில்லியில் இருந்து திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் சென்னைக்கு புறப்பட்டனர்.  இதனால், காவேரி மருத்துவமனை முன்பு கவலைகள் அதிகரித்தது. 

இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், திமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.  

திமுக-வின் குடும்ப மருத்துவர் கோபாலும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.