அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் கவனத்துக்கு..!

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


சென்னை: தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

தென்மேற்குப் பருவ மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, கேரளாவின் வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மிகக் கன மழை பெய்துள்ளது. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணையின் மதகுகள் திறந்து விடப்பட்டுள்ளன. சென்னைக்கு இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளில் இதுவரை பெய்திராத மழை பதிவாகியுள்ளது. வயநாடு பகுதியில் கடந்த 54 மணி நேரத்தில் 800 மி.மீ. மழை பெய்துள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பெய்துள்ளது.

இதே போல தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கன மழை பதிவாகியுள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் மழை பெய்துள்ளது.

சென்னையில் மழை நிலவரம்: இன்றும் சென்னைக்கு மழை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் தினமும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.