‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

விஸ்வரூபம்-2' படத்தை வெளியிட தடை இல்லை

நடிகர் கமல்ஹாசன் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம்-2' படத்தை வெளியிட தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


நடிகர் கமல்ஹாசன் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம்-2' படத்தை வெளியிட தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், மர்மயோகி' என்ற படத்தைத் தயாரிப்பது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ரூ.100 கோடியில் தயாரிக்கத் திட்டமிட்டு, தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடியும், படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடியும் வழங்கப்பட்டது. 
ஆனால் அவர் மர்மயோகி' படத்தைத் தயாரிக்காமல் உன்னைப் போல் ஒருவன்' படத்தை எடுத்தார். இதனையடுத்து மர்மயோகி' படத்தின் தயாரிப்பு பணிகளுக்காகக் கொடுத்த ரூ.6.90 கோடியை திரும்பத் தரக் கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் விஸ்வரூபம்-2' படத்தை ஆகஸ்ட் 10- ஆம் தேதி வெளியிடப்போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. 
எனவே மர்மயோகி' படத்துக்காக அவருக்கு கொடுத்த ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியாக வழங்காமல், விஸ்வரூபம்-2' படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக பதிலளிக்க கமல்ஹாசனுக்கு உத்தரவிட்டிருந்தது.
கமல்ஹாசன் பதில் மனு: இந்த வழக்கில் கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: மனுதாரரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. மர்மயோகி' படத்துக்கான பணிகளைக் கடந்த 2007-ஆம் ஆண்டு துவங்கினேன். 
இந்தப் படத்தை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டது. படத்தை இயக்கி நடிக்க ரூ.4 கோடி முன்பணமாக, டிடிஎஸ் பிடித்தம் போகப் பெறப்பட்டது. இந்தப் படத்துக்காக அமிதாப்பச்சன், பிரியங்கா சோப்ரா, பிபாஷா பாசு ஆகியோரை ஒப்பந்தம் செய்வதாக நான் உறுதியளிக்கவில்லை. 
மேலும் படத்தை எடுக்க மனுதாரர் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆனால், அவரிடமிருந்து பெறப்பட்ட தொகைக்கான பணிகளைச் செய்துள்ளோம். 
மர்மயோகி' படத்துக்கான தொகையை வைத்து உன்னைப் போல் ஒருவன்' படத்தை நான் எடுத்தேன் என்பது உண்மைக்குப் புறம்பானது. எனவே, விஸ்வரூபம்-2' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் உத்தரவு: இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் கமல்ஹாசன் பதில் மனுவை ஏற்று விஸ்வரூபம்-2' படத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.