தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அனுமதியளித்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அனுமதியளித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. எனவே, மனுவை நிராகரிக்க வேண்டும்' என்றார். இதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். 
இதனிடையே, இந்த வழக்கில் தான் தாக்கல் செய்துள்ள பதில் மனு தொடர்பாக வாதாடுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாய்ப்புக் கேட்டார். ஆனால், அதற்கு நீதிபதிகள் வாய்ப்பு பின்னர் தரப்படும்' எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம், 1996-இல் தொடங்கி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது போராடிய அதே நபர்கள்தான் இப்போதும் போராடி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற போராட்டத்துக்கு வெளியிலிருந்து லாரிகள் மூலம் ஆள்கள் அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த விவகாரம் அரசியலாகிவிட்டது. நாட்டில் 40 சதவீதமான காப்பர் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை விரும்பாத காப்பர் ஏற்றுமதி செய்யும் நாடுகள் போராட்டத்தை தூண்டி விட்டுள்ளன. ஆலைக்கு எதிரான போராட்டம் முழுவதும் அரசியல் நோக்கம் கொண்டதாகும். ஸ்டெர்லைட் ஆலையால் எவ்வித மாசும் ஏற்படவில்லை. தூத்துக்குடி தொழிற்பேட்டையில் அனல் மின் நிலையம் (தெர்மல் பிளான்ட்) உள்ளிட்ட 65 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன' என்றார்.
அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல், இந்த விவகாரத்துக்கு தீர்வுதான் என்ன? உச்ச நீதிமன்றம் ரூ. 100 கோடியை செலுத்த உத்தரவிட்டுள்ளதே?' என வினவினார்.
இதற்கு மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து எவ்வித கழிவும் வெளியேறவில்லை. தூத்துக்குடி மேம்பாட்டுக்காக தமிழக அரசுக்கு செலுத்தப்பட்ட ரூ. 100 கோடி பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஆலை மாசு ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்' எனத் தெரிவித்து, வழக்கு கடந்து வந்த பாதைகுறித்து விளக்கினார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி, தமிழக அரசின் வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா ஆகியோர் ஆஜராகி, ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதாலேயே அதை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நீர், விளைநிலம் உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட காப்பர் கழிவுகளால் அருகில் செல்லக்கூடிய உப்பாறும் மாசடைந்துள்ளது. ஆற்றிலிருந்து காப்பர் கழிவுகள் அகற்றப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றப்படும் காப்பர் திடக் கழிவுகள் உப்பாற்றில் கொட்டப்படுகின்றன. அதனால், அந்த ஆற்றின் நீரோட்டம், நீர் தன்மை பாதிப்படைகிறது' எனத் தெரிவித்து புகைப்படங்களை தாக்கல் செய்தனர்.
மேலும், அவர்களது வாதத்தில், சுற்றுசூழலுக்கு கேடு விளைவிப்பதால்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரை ஆய்வு செய்த போது அதில் குளோரைடு உள்ளிட்ட அமிலங்களின் தன்மை அதிகமாக உள்ளது. இது நீரை மாசுபடுத்துகிறது. இவை இந்த ஆலை வெளியேற்றும் கழிவுகளால் ஏற்பட்டதாகும். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர், மாசு அடைந்து இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை தொடர்பாக மத்திய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறதா என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.