தென் மேற்குப் பருவ மழை: தலைக்காவிரியில் மட்டும் கொட்டித் தீர்த்த மழையின் அளவு?

இந்தியாவில் தென் மேற்குப் பருவ மழை காலம் தொடங்கியது முதல் தற்போது வரை காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் 700 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை: தலைக்காவிரியில் மட்டும் கொட்டித் தீர்த்த மழையின் அளவு?
Published on
Updated on
1 min read


சென்னை: இந்தியாவில் தென் மேற்குப் பருவ மழை காலம் தொடங்கியது முதல் தற்போது வரை காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் 700 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கேரள, கர்நாடக மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் காவிரியில் கட்டப்பட்ட அணைகள் நிரம்பியதால், நீர்வரத்து முழுவதையும் காவிரியில் திறந்து விடும் நிலை கர்நாடக அரசுக்கு ஏற்பட்டது. ஒரு சில நாட்களிலேயே மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் தலைக்காவிரியில் மீண்டும் கன மழை தொடங்கியது.

தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் ஜூன் 1ம் தேதி முதல் இன்று வரை தலைக்காவிரியில் 700 செ.மீ. மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, கடந்த 24 மணி நேரத்தில் ஹாரங்கி அணையின் நீர்பிடிப்புப் பகுதியான கலிபீடு பகுதியில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தலைக்காவிரியில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென் மேற்குப் பருவ மழை தொடங்கியது முதல் தற்போது வரை தலைக்காவிரியில் 700 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காவிரியிலும், வால்பாறையில் உள்ள அணைகளிலும் கட்டுக்கடங்காத வெள்ள நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.