தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தரைத் தேர்வு செய்ய தேடல் குழு

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான 3 பேர் கொண்ட தேடல் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 1:52 am IST


மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான 3 பேர் கொண்ட தேடல் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லதுரையின் நியமனத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவருடைய நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, செல்லதுரை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், துணைவேந்தர் செல்லதுரை நீக்கம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது எனவும் தீர்ப்பளித்தது.
இதன் காரணமாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தடை நீங்கியதைத் தொடர்ந்து,
பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான மூன்று பேர் கொண்ட தேடல் குழுவை நியமித்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
நாகேஸ்வர் ராவ் தலைமையில்...அதில், ஆளுநரின் பிரதிநிதியாக புதுதில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய தலைமையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.தங்கமுத்து , அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான மூன்று பெயர்களை ஆளுருக்குப் பரிந்துரைக்கும். அதிலிருந்து ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.