அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

ரூ.24 ஆயிரம் லஞ்சம்:  கிருஷ்ணகிரி தொழிலாளர் துணை ஆய்வாளர் கைது

ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிருஷ்ணகிரி தொழிலாளர்  துணை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ஒசூர்: ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிருஷ்ணகிரி தொழிலாளர்  துணை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி தொழிலாளர் துறையில் துணை ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் ராமு (55). இவர் சூளகிரி பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அளவீட்டு கருவிகளை ஆய்வு செய்து, "சீல்' வைப்பதற்காக சென்றார். அப்போது, அங்குள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அதற்கான கட்டணத் தொகையை வசூலித்ததுடன் லஞ்சமாக ரூ.24 ஆயிரம் கேட்டாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பெட்ரோல் விற்பனை நிலைய நிர்வாகத்தினர், இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் செய்தனர்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆலோசனைப்படி, ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ.24 ஆயிரத்துக்கான நோட்டுகளை ராமுவிடம் கொடுப்பதற்காக அங்குள்ள உணவகத்துக்கு பெட்ரோல் விற்பனை நிலைய நிர்வாகத்தினர் வரச் சொன்னார்களாம்.
அதன்படி, ராமு வியாழக்கிழமை இரவு சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவுகத்துக்குச் சென்று பணத்தைப் பெறும் போது,  அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ராமுவை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.