சென்னை: விவசாயிகள் தங்களது உயிர் பாதுகாவலன் இயற்கை விவசாயி நெல் ஜெயராமனை(50) இழந்து விட்டார்கள் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தனது இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் தீவிர விசுவாசியாக அவரது கருத்துகளை அப்படியே பின்பற்றி வந்தவர் நெல் ஜெயராமன். பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பயணம் செய்து 160க்கும் மேற்பட்ட அரியவகை நெல் விதைகளை சேகரித்து தொடர்ந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கை ஏற்படுத்தியவர்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் உயிரிழந்தார்
நெல் ஜெயராமன் மறைவுக்கு வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் விதைகளை சேகரித்து தொடர்ந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கை ஏற்படுத்தியவர் நெல் ஜெயராமன். அவரது மறைவால் விவசாயிகள் தங்களது உயிர் பாதுகாவலனை இழந்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
நெல் ஜெயராமன் மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராக போராடியவர். பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியமைக்காக மத்திய, மாநில அரசுகளின் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


