சென்னை: திமுகவில் இருந்து பிரிந்து சென்று சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு மாறினார். இன்று அங்கிருந்து விலகிய அவர், தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன், டி.ஆர். பாலு, ஆர். ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.
அமமுகவுடன் இணைந்து செயல்பட்டதால் பேரவைத் தலைவர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரனை செந்தில்பாலாஜி வலியுறுத்தி வந்துள்ளார். அதை டிடிவி தினகரன் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், அமமுகவிலிருந்து விலகும் முடிவை செந்தில்பாலாஜி எடுத்துள்ளார்.
மேலும், கரூரைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மோதல் உள்ளதால், மீண்டும் அதிமுகவுக்குச் செல்ல முடியாத நிலையில் செந்தில்பாலாஜி இருந்து வருகிறார்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 12 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஜேபி போராட்டம்: தவறான பதிவுகள் குறித்து சமூக ஊடக கணக்குகளுக்கு தில்லி போலீஸ் நோட்டீஸ்

நீட் உயா்நிலைக் குழு ஏமாற்று வேலை: அமைச்சா் வன்னி அரசு

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையாா் கோயிலில் உடல் பருமன் கொண்டவா்கள், வயதானவா்களுக்கு தடை

ஆக்ஸட் 1 ஆம் தேதி தில்லியில் இ20க்கு எதிராக ஆம் ஆத்மி ஆா்ப்பாட்டம்: அரவிந்த் கேஜரிவால்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



