கோவையில் பிடிபட்ட விநாயகன் யானையை முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் கர்நாடக வன எல்லையில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு வனத்துறையினர் விடுவித்தனர்.
கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை தாக்கியும் வந்த காட்டு யானை விநாயகனை வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை பிடித்தனர்.
விஜய், பொம்மன் ஆகிய கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்கப்பட்ட இந்த யானையை லாரி மூலம் முதுமலைக்கு வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு கொண்டு வந்தனர்.
பின்னர், அந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வசீம், கணேஷ், முதுமலை ஆகிய மூன்று கும்கி யானைகளைக் கொண்டு லாரியிலிருந்து இறக்கி கர்நாடக எல்லையிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில் இறக்கிவிட்டனர்.
கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், மனோகரன் ஆகியோரது மேற்பார்வையில் யானையை வனத்துக்குள் அனுப்பும் பணி நடைபெற்றது.
புலிகள் காப்பக உதவி இயக்குநர் செண்பகப்பிரியா யானையை விடுவிக்கும் பணியைப் பார்வையிட்டார். காலர் ஐ.டி. பொருத்தப்பட்டுள்ளதால் யானையின் நடமாட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும். மாலை 5.30 மணிவரை யானை நல்ல ஆரோக்கியத்துடன் நடமாடுவதாக புலிகள் காப்பகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கர்நாடகத்தைவிட்டு வெளியேற்றுவோம்: டாக்ஸிக் நடிகருக்கு நடிகை எச்சரிக்கை

தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்! தர்மன் படக்குழு கொண்டாட்டம்!

திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைது
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



