கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கஜா புயல்: முதல்வரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.108.34 கோடி வசூல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.108.34 கோடி வரப்பெற்றுள்ளதாக

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.108.34 கோடி வரப்பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகளை வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, ஏற்கெனவே ரூ.87.88 கோடி நிதி வசூலாகி இருந்தது.
இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதியன்று முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் அளிக்கப்பட்டன. போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சார்பில் ரூ.13.15 கோடியும், எல் அன்ட் டி நிறுவனம் சார்பில் ரூ.1.50 கோடியும், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ரூ.1 கோடியும், உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பில் ரூ.74.62 லட்சமும், ஆர்.எம்.கே., கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ.50 லட்சமும், நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு மாநில மையம், சத்திரப்பட்டி பொது சுத்திகரிப்பு நிறுவனம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் ஆகியன சார்பிலும் நிதிகள் அளிக்கப்பட்டன.
நேரடியாகவும், ஆன்-லைன் வழியாகவும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.108.34 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.