சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாட்டின் சிறந்த முதல் 10 காவல் நிலையங்களின் பெயர்பட்டியலில் தமிழகம், புதுச்சேரி பெற்றுள்ள இடம்? 

2018 ஆம் ஆண்டின் நாட்டின் சிறந்த முதல் 10 காவல் நிலையங்களின்  பட்டியலில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடத்தையும், தமிழகத்தை

News image
Updated On :21 டிசம்பர் 2018, 4:01 am

DIN


2018 ஆம் ஆண்டின் நாட்டின் சிறந்த முதல் 10 காவல் நிலையங்களின்  பட்டியலில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடத்தையும், தமிழகத்தை சேர்ந்த பெரியகுளம் காவல் நிலையம் 8வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறந்த முதல் 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்து வருகின்றது. 

அந்த வகையில் உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகம் 2018 ஆம் ஆண்டின் நாட்டின் சிறந்த முதல் 10 காவல் நிலையங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. 

Story image

இது தொடர்பான பட்டியலை, தனது டுவிட்டர் பக்க பதிவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில், ராஜஸ்தான் மாநிலம் கலு காவல் நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் பே காவல் நிலையமும், மூன்றாவது இடத்தை மேற்கு வங்கத்தில் உள்ள பரக்கா காவல் நிலையமும் பெற்றுள்ளது. 

இதில், புதுச்சேரியில் உள்ள நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடத்தையும், தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் 8வது இடத்தையும் பிடித்துள்ளது. 

கர்நாடகா மாநிலம் குடரி ஐந்தாவது இடத்தையும், இமாச்சல பிரதேசம் மாநிலம் சோபல் ஆறாவது இடைத்தையும், ராஜஸ்தான் மாநிலம் லாகரி ஏழாவது இடத்தையும், உத்தரகண்ட் மாநிலம் முன்சரி ஒன்பாதவது இடத்தையும், கோவா மாநிலம் சர்ச்சோரம் பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளது. 

இந்திய அளவில் முதல் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில், புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடம் பிடித்துள்ளதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.