சென்னை: தமிழர்கள் உடம்பில் படர் தாமரை வேண்டுமானால் மலரும்; ஆனால் தமிழகத்தில் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ' தமிழகத்தில் தாமரை மலரும்' என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பேசி வருகிறார்.
இந்நிலையில் தமிழர்கள் உடம்பில் படர் தாமரை வேண்டுமானால் மலரும்; ஆனால் தமிழகத்தில் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
வீர மங்கை வேலு நாச்சியாரின் 222-ஆவது நினைவு தினமானது சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் கூறியதாவது:
தமிழர்கள் உடம்பில் படர் தாமரை வேண்டுமானால் மலரும்; ஆனால் தமிழகத்தில் தாமரை மலராது.
காவிரி, பாலாறு என நாம் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். முதலில் அங்கெல்லாம் தண்ணீர் கொடுக்கச் சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம்.
பாஜக எப்போதும் தமிழர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவர்களை பொறுத்தவரை நாம் ஒரு ஓட்டு, அவ்வளவுதான்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழர்களை அவர்கள் நடத்திய விதமே அதற்கு சாட்சி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈஸ்டர் திருநாள் வழிபாடு!

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

சமூக ஊடகங்களிலிருந்து விலகினார் விஷ்ணு விஷால்!

விஜய்யை பார்க்கச் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தமளிக்கிறது: காளியம்மாள்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


