திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

திருவாரூரில் ஜனவரி 3-ல் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம்: மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

திருவாரூர் மாவட்டத்தில் ஜனவரி 3-ஆம் தேதி திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

News image
Updated On :25 டிசம்பர் 2018, 1:14 pm IST

திருவாரூர் மாவட்டத்தில் ஜனவரி 3-ஆம் தேதி திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
“மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன் வைத்துத்தான் நம்முடைய செயல்பாடுகள் இனி அமைய வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

24.12.2018 அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பொறுப்பாளர்கள்  கூட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அஅறிவித்தபடி, ஜனவரி 3-ஆம் தேதியன்று  தொடங்கி பிப்ரவரி 10-ஆம் தேதி வரையில், 12,617 ஊராட்சிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் “ஊராட்சி சபைக் கூட்டம்” நடைபெறும்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊராட்சி சபைக் கூட்டங்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திலும் - கழக பொருளாளர் துரைமுருகன் ஈரோடு மாவட்டத்திலும் - கழக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 2019 ஜனவரி 3ஆம் தேதியன்று தொடங்கி வைத்திட உள்ளார்கள்.

மற்ற மாவட்டங்களில் ஏற்கனவே தலைமைக் கழகத்தின் சார்பில் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தின் அடிப்படையில் ஊராட்சியின் பெயர், கலந்து கொள்ளும் தலைமைக் கழக பிரதிநிதிகள் விவரம், தேதி, நேரம் அனைத்தும் அடங்கிய அறிவிப்பினை அந்தந்த கழக மாவட்டச் செயலாளர்கள் வெளியிடுவார்கள். அதன்படி அந்தந்த மாவட்டங்களில் “ஊராட்சி சபைக் கூட்டம்” நடைபெறும்.

பாசிச பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு - மக்கள் விரோத மாநில அ.தி.மு.க அரசுகளின் அவலத்தையும், நிர்வாக தோல்விகளையும், ஊர் ஊராக - வீதி வீதியாக - வீடு வீடாகச் சொல்லும் பிரச்சாரப் பயணம் என்பதால், அனைத்து ஊராட்சிகளில் நடைபெறும் “ஊராட்சி சபைக் கூட்டத்திற்கான” தலைமைக் கழக பிரதிநிதிகள் அறிவிக்கப் பட்டுள்ளார்கள். கழகத் தலைவரால், அறிவிக்கப்பட்டுள்ள ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைமைக் கழக பிரதிநிதிகளுக்கு,  கழக நிர்வாகிகள் - அனைத்து அணி நிர்வாகிகள் - கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பிரச்சாரத்தின் போது தலைமைக் கழகத்தின் சார்பில் தயாரித்து வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அளித்து, கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களையும்  - மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க. அரசின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைத்திட வேண்டும்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள இந்த “ஊராட்சி சபை கூட்டம்” நடைபெற உள்ள அனைத்து விவரங்களையும், தொடர்ந்து தலைமைக் கழகத்திற்கு தெரியப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.