மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: ரூ.1 லட்சம் கோடி காசோலைகள் முடங்கும்

வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் புதன்கிழமை (டிச. 26) நாடு முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

News image

கோப்புப் படம்

Updated On :26 டிசம்பர் 2018, 1:09 am IST

வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் புதன்கிழமை (டிச. 26) நாடு முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் 85,000 வங்கிக் கிளைகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனால், வங்கிச் சேவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.1 லட்சம் கோடி காசோலை பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வங்கிகள் இணைப்பு நடவடிக்கையைக் கண்டித்து கடந்த 21-ஆம் தேதி வங்கி அதிகாரிகள் நாடு முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் அடுத்தகட்டமாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் புதன்கிழமை (டிச. 26) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். வங்கி இணைப்பை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 85,000 வங்கிக் கிளைகளைச் சேர்ந்த 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு முன்னாள் பொதுச் செயலாளர் பி.தாமஸ் பிராங்கோ கூறியது: இந்த வேலைநிறுத்தம் காரணமாக, வங்கியில் பணம் எடுக்கவோ, வைப்பு வைக்கவோ முடியாது. ஏற்றுமதி, இறக்குமதி கணக்கு, அரசாங்க கருவூல கணக்கு உள்பட பல்வேறு வங்கிச் சேவைகள் பாதிக்கும். குறிப்பாக காசோலை பரிவர்த்தனையை பொருத்தவரை, நாடு முழுவதும் ரூ.1 லட்சம் கோடி காசோலை பரிவர்த்தனையும், தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனையும் முடங்கும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.