சென்னை: வரும் புத்தாண்டு தமிழக மக்களுக்கு புதிய எழுச்சியும், வளர்ச்சியும் அளிக்கும் ஆண்டாக அமையும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் 2019ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
``எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதே எனது அரசின் குறிக்கோள்” என்ற முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் கனவினை நனவாக்கும் வகையில், அவரது வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்கான திட்டங்களை தீட்டி, மக்கள் வாழ்வு வளம்பெற தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்டங்களை மக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி, வளமும், வலிமையும் மிக்க தமிழ்நாட்டை படைத்திடவும், தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.
இப்புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் முதல்வர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை
36 நாள்களுக்குப் பிறகு... அமைதி திரும்பிய ஜந்தர் மந்தர்!

2 கோல்கள் அடித்த நெய்மர்..! கொண்டாட்டத்தின் மூலமாக விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்த வாரம் கலாரசிகன் - 26-07-2026
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



