ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தமிழகம் முழுவதும் 4 மணி நேரம் ரயில்வே இணையதள செயல்பாடு நாளை நிறுத்தி வைப்பு

தமிழகம் முழுவதும் தெற்கு ரயில்வே இணையதளத்தின் செயல்பாடு ஞாயிற்றுக்கிழமை 4 மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.

News image
Updated On :3 பிப்ரவரி 2018, 2:00 pm

தமிழகம் முழுவதும் 4 மணி நேரங்களுக்கு ரயில்வே டிக்கெட் கௌன்டர்கள் மற்றும் இணையதளம் ஞாயிற்றுக்கிழமை செயல்படாது என்று தெற்கு ரயில்வே சனிக்கிழமை அறிவித்துள்ளது.

பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான பணிகளின் காரணமாக டிக்கெட் கௌன்டர்கள் மற்றும் இணையதளத்தின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இவற்றில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது, தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட சேவை மேம்பாடு பணிகளின் காரணமாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. 

எனவே தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே ஆகியவற்றின் கீழ் இயங்கும் (http://www.sr.indianrailways.gov.in ) என்ற இணையதளம் மதியம் 2.05 மணி முதல் 3.45 மணி வரையும், இரவு 11.30 மணி முதல் 1.45 வரையிலான செயல்பாடு ரத்து செய்யப்படுகிறது.  இந்த நேரத்தில் டிக்கெட் கௌன்டர்களும் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.