மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரை விமான நிலையத்தில் புராதன விநாயகர் சிலை பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை வெளிநாட்டுக்கு புராதன விநாயகர் சிலையை கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டினர் இருவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 8:20 pm

DIN

மதுரை விமான நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை வெளிநாட்டுக்கு புராதன விநாயகர் சிலையை கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டினர் இருவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேப்ரி (60), பிரா லீ மீவல் (74) ஆகியோரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் உலோகத்தாலான 4.8 கிலோ எடையுள்ள 1 அடி உயர விநாயகர் சிலை வைத்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடையில் சிலையை வாங்கியதாகத் தெரிவித்தனர். மத்திய சுங்க நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் அது புராதன சிலை என தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள், வெளிநாட்டினர் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.