மின்சாரம் பாய்ந்து பலியான 14 பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

மின்சாரம் பாய்ந்து பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக திங்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
மின்சாரம் பாய்ந்து பலியான 14 பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
Updated on
1 min read

மின்சாரம் பாய்ந்து பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக திங்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தருமபுரி நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன், முருகன், கரூர் திருக்காம்பூலியூரைச் சேர்ந்த அசோக்குமார், வெங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், வேலூர் வேம்பி கிராமத்தைச் சேர்ந்த தேவன் ஆகியோர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். 
சேலம் மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சத்தியன், திருச்சி வரகனேரி கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன், தூத்துக்குடி கீரனூர் 
கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், மதுரை தெற்குத்தெரு கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா, வேலூர் வன்னிவேடு மதுரா இந்திரா நகரைச் சேர்ந்த ஜானகிராமன் ஆகியோர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
நாகப்பட்டினம் கங்காதரபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு, மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். திருவள்ளூர் குமாரராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் மருத்துவமனையில் பணியில் இருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்; மதுரை நரசிங்கம் கிராமத்தைச் சேர்ந்த இயலரசி விளையாடிக் கொண்டிருந்தபோது, மின் கம்பியை பிடித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்; புதுக்கோட்டை அத்தாணி வடக்கு வட்டத்தைச் சேர்ந்த பாலையா எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இந்தச் செய்திகளை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com