சென்னையில் ரூ.1000 பஸ் பாஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் மாற்றமின்றி ரூ.1000 ஆகத் தொடரும் என்று போக்குவரத்து துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னையில் ரூ.1000 பஸ் பாஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் மாற்றமின்றி ரூ.1000 ஆகத் தொடரும் என்று போக்குவரத்து துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த 20ம் தேதி மாநிலம் முழுவதும் பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்த பிறகு, சென்னையில் ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதே போல ஒரு நாள் பயண அட்டை கட்டணம் ரூ.50-இல் இருந்து ரூ.80 ஆகவும், மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,300 ஆகவும் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகின   

இந்நிலையில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் மாற்றமின்றி ரூ.1000 ஆகத் தொடரும்.

அதேநேரம் சென்னையில் ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணத்தினை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது 

ரூ.240 ஆக உள்ள மாதாந்திர பஸ் பாஸ் பயணக் கட்டணம் மட்டும் தற்பொழுது ரூ.320 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

பேரூந்து கட்டன உயர்வுக்குப் பிறகு பேருந்துகளில் பயணிப் போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

தற்பொழுது புதிதாக 2000 பேருந்துகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com