பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சென்னையில் மாயமான பூனைகளைத் தேடியதில் கிடைத்த பகீர் தகவல்!

சென்னையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான வளர்ப்புப் பூனைகள் மாயமானதற்கும், சாலையோர பிரியாணி கடைகளில் மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையானதற்கும் சம்பந்தம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:35 am

DIN


சென்னை: சென்னையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான வளர்ப்புப் பூனைகள் மாயமானதற்கும், சாலையோர பிரியாணி கடைகளில் மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையானதற்கும் சம்பந்தம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

சாலையோர பிரியாணி கடைகளில் சிக்கன் பிரியாணிக்கு பதிலாக காக்கா பிரியாணி விற்கப்படுவதாக சினிமாவில் நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றன. ஆனால் உண்மையிலேயே மட்டன் பிரியாணிக்கு பதிலாக சில சாலையோரக் கடைகளில் பூனைக் கறி பரிமாறப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக பல வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த பூனைகள் காணாமல் போனதாக விலங்குகள் நல அமைப்புக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இது குறித்து விசாரிக்கத் தொடங்கியது.

அப்போதுதான், வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளை, நரிக்குறவ இனத்தவர்கள் பிடித்து கொடூரமாகக் கொண்டு அதனை இறைச்சியாக்கி, ஆட்டிறைச்சி என்று கூறி சாலையோர பிரியாணி கடைகளுக்கு குறைந்த விலையில் விற்று வந்தது தெரிய வந்துள்ளது.

காவல்துறையினரின் உதவியோடு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பூனைகளைப் பிடித்து பிரியாணி கடைகளுக்கு இறைச்சி விற்கும் கும்பலிடம் இருந்து சுமார் 40 பூனைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், பூனைகளை பிடித்து பிரியாணி கடைகளுக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை தொடரும் என்று கூறியுள்ளார்.  நரிக்குறவர்கள் பல பகுதிகளுக்கு நள்ளிரவில் சென்று வலைகளைப் போட்டு பூனைகளைப் பிடிக்கின்றனர்.

பூனைகளை கொதிக்கும் நீரில் போடுவது உட்பட மிக மோசமாக அவற்றைக் கொன்று அந்த இறைச்சியை சாலையோர உணவகங்களுக்கு விற்று விடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்று பூனை இறைச்சியைப் பயன்படுத்தி பிரியாணி தயாரிக்கும் சாலையோரக் கடைகள் பொதுவாக டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அமைந்திருப்பதால், வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த புகாரும் எழுவதில்லை என்றும் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.