வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜெயலலிதா உருவப்படம் முன்பு அதிமுகவினர் செல்ஃபி! 

சட்டப்பேரவை மண்டபத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன்பாக, அதிமுக நிர்வாகிகள் பலரும் ஆர்முடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 11:14 pm

DIN

சட்டப்பேரவை மண்டபத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன்பாக, அதிமுக நிர்வாகிகள் பலரும் ஆர்முடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழுஉருவப் படம் சட்டப் பரவையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
ஆளும் கட்சியினரா...எதிர்க்கட்சியினரா...படத் திறப்பு விழாவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதனால், அந்தக் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமரும் இருக்கைகள் காலியாக இருந்தன. இந்த இருக்கைகளில் அதிமுக எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசு வழக்குரைஞர்கள் என பலரும் அமர்ந்திருந்தனர். அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளும்அமர்ந்தனர்.
செல்ஃபி மோகம்: சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவைக்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல மறுக்கப்படுவது வழக்கம். 
ஆனால், ஜெயலலிதா உருவப்பட திறப்பு, பேரவை மண்டபத்தில் நடந்த பொதுவான விழா என்பதால் பலரும் செல்லிடப்பேசியுடன் அனுமதிக்கப்பட்டனர். விழா முடிந்ததும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவப்படத்துக்கு முன்பாக நின்று அதிமுகவினர் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அலங்கரிக்கப்பட்ட படங்கள்: ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு விழாவையொட்டி, பேரவை மண்டபம் உள்பட தலைமைச் செயலகத்தின் வாயில்கள் அனைத்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. காந்தியடிகள், ராஜாஜி உள்பட பேரவையில் ஏற்கெனவே உள்ள பத்து தலைவர்களின் படங்களும் மலர் மாலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டன.
ஜெயலலிதாவின் உருவப் படம் முழுவதும் ரோஜா மலர்களால் தொடுக்கப்பட்ட பிரமாண்ட மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரிமோட் கருவி மூலம் படத்தை பேரவைத் தலைவர் தனபால் திறந்து வைத்தார். விழாவுக்காக பேரவை மண்டபத்துக்குள் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் முதல்வர், துணை முதல்வர், மக்களவை துணைத் தலைவர், பேரவை துணைத் தலைவர், அரசு கொறடா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
விழாவுக்கு முன்னிலை, தலைமை வகித்த முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு பேரவைத் தலைவர் தனபால் நினைவுப் பரிசுகளை வழங்கினார். ஜெயலலிதாவின் உருவப்படத்தை வரைந்த, கவின்கலை கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் உரை: விழாவின்போது, "தனக்குப் பின்பும் அதிமுக என்ற கட்சி நூறாண்டுகள் வெற்றி நடைபோடும்' என்ற ஜெயலலிதாவின் சட்டப்பேரவை உரையின் சிறிய பகுதியும், ஆளும்கட்சி எப்படிச் செயல்பட வேண்டும் என்று அவர் பேசிய மற்றொரு உரையின் சிறிய பகுதியும் ஒலிபரப்பப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.