தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜெயலலிதா குறித்து விஜயதரணி பேசியது அவருடைய சொந்தக்கருத்து: சு.திருநாவுக்கரசர்

ஜெயலலிதா குறித்து விஜயதரணி பேசியது அவருடைய சொந்தக்கருத்து என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:46 am

DIN

ஜெயலலிதா குறித்து விஜயதரணி பேசியது அவருடைய சொந்தக்கருத்து என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் இன்று திறக்கப்பட்டது. ஆனால் இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு விழாவையும் புறக்கணித்தன. மாறாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி ஜெயலலிதா படத்திறப்புக்கு ஆதரவு தெரிவித்தார். விஜயதரணியின் இந்த முடிவு கூட்டாளி கட்சியான தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறுகையில், 
காங்கிரஸ் முடிவுப்படி படத்திறப்பு விழாவில் விஜயதரணி பங்கேற்காததால் அவர் மீது நடவடிக்கை இருக்காது. படத்திறப்பு விவகாரத்தில் விஜயதரணி பேசியது குறித்து அவரிடம் விவாதிக்கப்படும். ஜெயலலிதா குறித்து விஜயதரணி பேசியது அவருடைய சொந்தக்கருத்து. செய்தியாளர்களிடம் விஜயதரணி பேசிய கருத்துகள் சட்சித் தலைமையிடம் கொண்டு செல்லப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.