தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோயில் நிலங்களை மீட்க 6 வாரத்தில் குழு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தமிழகத்தில் கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க 6 வாரத்துக்குள் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:46 am

DIN


மதுரை: தமிழகத்தில் கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க 6 வாரத்துக்குள் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக முத்துசாமி மற்றும் அண்ணாமலை என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

அதில், கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக 6 வார காலத்துக்குள் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசால் அமைக்கப்படும் குழு, தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களை மீட்டு, சந்தை விலைப்படி குத்தகை அல்லது வாடகைத் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும். சந்தை விலைப்படி நிர்ணயிக்கப்படும் புதிய தொகையை ஏற்போருக்கு மட்டுமே தொடர்ந்து வாடகை அல்லது குத்தகைக்கு விட வேண்டும். புதிய தொகையை ஏற்க மறுப்பவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு பொது ஏலத்தில் விட வேண்டும்.

கோயில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதனை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்களை மீட்பதற்கு அறநிலையத்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று நீதிபதிகள் கூறியுள்ள நிலையில், கோயில் நிலங்களை மீட்பதில் தனது பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.