ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தேர்தல் பிரசாரத்துக்காக புதுவை முதல்வர் மேகாலயா பயணம்

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்வதற்காக, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி அந்த மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:13 am

தினமணி

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்வதற்காக, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி அந்த மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்.27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு பிரசாரப் பணிகளில் ஈடுபட புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி மேகாலயாவில் 3 நாள் பிரசாரம் மேற்கொள்ள ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

பிற்பகலில் மேகாலயா சென்றடைந்த அவர், பிரசாரப் பணிகளை உடனடியாகத் தொடங்கினார்.

செவ்வாய்க்கிழமை வரை பல்வேறு பிரசாரப் பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளார். அன்றிரவே முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.