6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்த சந்திப்பில் இருந்தது நட்பு மட்டுமே: ரஜினியை சந்தித்த பின்னர் கமல் பேட்டி! 

இந்த சந்திப்பில் இருந்தது 'நட்பு' மட்டுமே என்று ரஜினிகாந்த்தினைச் சந்தித்த பின்னர் நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2018, 10:01 am

DIN

சென்னை: இந்த சந்திப்பில் இருந்தது 'நட்பு' மட்டுமே என்று ரஜினிகாந்த்தினைச் சந்தித்த பின்னர் நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

அதேபோல அரசியல் பிரவேசத்தினை அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் நியமனம் , கூட்டங்கள் என்று தொடர்ந்து பரபரப்பாக செயல்பட்டுவருகிறார்.    

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் ஞாயிறு மதியம் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் 'திடீர்' சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது கூறியாதவது:

எனது மிக முக்கியமான ஒரு பயணத்திற்கு முன்னதாக நண்பர் ரஜினிகாந்தைச் சந்திக்க வந்திருந்தேன். முதலில் அரசியலில் ஈடுபடுவது என்று முடிவெடுத்த உடன் அவரிடம்தான் தெரிவித்தேன்.  இது முழுக்க முழுக்க நட்புரீதியான ஒரு சந்திப்பு மட்டுமே. அரசியல் கிடையாது. நட்புதான் இங்கு பிரதானம்.

எனது பயணத்திற்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். எனது பயணம் தொடர்பாக பிற அரசியல் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது  திமுக தலைவர் கருணாநிதியினை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் மறுத்துள்ளதாக வந்த தகவல் உண்மையல்ல.

இவ்வாறு கமல் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.