சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சட்டப் பேரவை சிறப்புச் செயலர் நியமனம்: பதிலளிக்க உத்தரவு

தமிழக சட்டப் பேரவை சிறப்பு செயலராக சீனிவாசன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அரசு, சட்டப் பேரவைச் செயலர் ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:59 pm

DIN

தமிழக சட்டப் பேரவை சிறப்பு செயலராக சீனிவாசன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அரசு, சட்டப் பேரவைச் செயலர் ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சட்டப் பேரவையின் கூடுதல் செயலர் எல்.எஸ்.வசந்திமலர், இணைச் செயலர் பி.சுப்பிரமணியம் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், சட்டப் பேரவை செயலராக இருந்து வரும் பூபதி வரும் பிப்ரவரி மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் பேரவைத் தலைவரின் தனிச் செயலராக இருந்து வரும் கே.சீனிவாசன், பேரவையின் சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவு ரகசியமாக நடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை பணிகளுக்கான நியமனத்துக்கு தனி விதிகள் உள்ளன. பணிமூப்பின் அடிப்படையில் சிறப்பு செயலர் பதவி கூடுதல் செயலர் அல்லது இணைச் செயலருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். விதிகளுக்குப் புறம்பாக நடந்துள்ள இந்த சிறப்பு செயலர் நியமனம் சட்ட விரோதமானது. எனவே நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு நிலுவையில் உள்ள வரை கே.சீனிவாசன் பதவியேற்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரியிருந்தனர். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு தொடர்பாக தமிழக அரசு, பேரவைச் செயலர் ஆகியோர் ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் சட்டப் பேரவை சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ள சீனிவாசனின் நியமனம் குறித்த உத்தரவு நகலை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.